Members
 Login
 Password

Register

Forget Password
Be Tamil | சீனா கூகுள் விவகாரம் - அமெரிக்க உறவில



ExitJunction.com  - Make Money From Your Exit Traffic!



சீனா கூகுள் விவகாரம் - அமெரிக்க உறவில் விரிசல்

16.01.2010

சீனாவில் கூகுள் நிறுவன விவகாரத்தால் அமெரிக்க சீன உறவுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. சீனாவில் இயங்கி வரும் உலகின் முக்கிய தேடு தளமான கூகுள், தனது கம்புயூட்டர் சர்வர்கள் சீனாவின் இனைய கட்டுப்பாட்டு விதிகளால் பாதிக்கப்படுவதாகவும், சீனாவில் இனைய சுதந்திரம் இல்லை என கூறி, இந்நிலை மாறாவிட்டால், சீனாவில் கூகுள் நிறுவனம் தனது சேவையை நிறுத்திவிடும் நிலைக்கு தள்ளப்படும் என தெரிவித்து இருந்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை பேச்சாளர், சீனாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா மிகவும் கவலை கொள்வதாகவும், இது குறித்து சீன தூதரகத்துடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளதாக குறிப்பிட்டார். இனைய சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது என்றும், இது மனிதர்களின் அடிப்படை உரிமை என குறிபிட்ட அவர், இனைய சுதந்திரம் குறித்து சீன அரசிடம் அமெரிக்க அரசு தனது எண்ணங்களை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

சில நாட்களுக்கு கூகுள் நிறுவனம், சீனாவின் உளவுதுறை, சீனாவின் மனித உரிமை ஆர்வலர்களின் மின்னஞ்சல்களை சட்டத்திற்கு புறம்பாக பார்ப்பதாகவும், தனது சர்வர்கள் அடிக்கடி ஊடுருவப்படுவதாகவும் கூறி இருந்தது. இதற்கிடையே, கூகுள் நிறுவனத்திற்கு வருகை புரிந்த சீனர்கள், அந்நிறுவனத்தின் கட்டிடத்தில் உள்ள பெயர் பலகைக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



World News



Tags : Be Tamil - World Online Tamil News Video Classifieds Cook Book Tamil Blogs Tamil Portal BeTamil Dina Seidhi Daily Science Samayal