Members
 Login
 Password

Register

Forget Password
Be Tamil | சீனாவில் கூகுளின் காப்பி வெப் சைட்



ExitJunction.com  - Make Money From Your Exit Traffic!



சீனாவில் கூகுளின் காப்பி வெப் சைட்

30.01.2010

கூகுள் இணையதளம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள யூடியூப் ஆகியவற்றின் போலியான இணையதளங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது. கூகுளின் போலி தளத்திற்கு கூஜி என பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப் இணையதளத்தின் போலிக்கு யூடியூப்சிஎன் என்று பெயரிட்டுள்ளனர். யூடியூப் இணையதளம் சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். கூஜி இணையதளத்தில் கூகுள் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

கூஜி என்றால் சீன மொழியில் சகோதரி என்று பொருளாம். கூஜி இணையதளத்தின் லோகோவுக்கு கீழ் இடம் பெற்றுள்ள 'பன்ச் டயலாக்'கில், 'சகோதரிக்காகத்தான் சகோதரன். சகோதரியை இன்னும் நேசிக்கும் சகோதரன்' என்று குத்தலாக குறிப்பிட்டுள்ளனர். அதாவது கூகுள் என்பதை சகோதரனாகவும், அவனால் நேசிக்கப்படும் சகோதரியாக கூஜியையும் காட்டுகிறார்களாம்.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் சீனாவில் பெரும் சிக்கலை சந்தித்தது. கூகுள் தளத்தை உளவு பார்க்கத் தொடங்கியது சீன அரசு. மேலும், கூகுள் இணையதளத்திற்கு சென்சாரும் விதித்தது. கூகுள் இணையதளத்திற்குள் வைரஸ்களையும் அனுப்பியதால் கடுப்பாகிப் போன கூகுள், தனது அலுவலகங்களை சீனாவிலிருந்து இடம் மாற்றப் போவதாக எச்சரித்தது. இதையடுத்து சீன அரசு சற்று இறங்கி வந்தது. இந்நிலையில், தற்போது கூகுளை அப்படியே காப்பி அடித்து போலி சர்ச் என்ஜின் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. கூகுள் இணையதளத்தின் லோகோ மற்றும் பக்கங்கள் அப்படியே டிட்டோவாக கூஜி தளத்தில் உள்ளன.

இதேபோல யூடியூபில் உள்ளதைப் போலவே அப்படியே காப்பி அடித்து, YouTubecn.com இணையதளம் வெளியாகியுள்ளது. ஒரிஜினல் யூடியூபில் உள்ள அத்தனையும் அப்படியே இதிலும் இடம் பெறுகிறது. அதேசமயம், சீனாவில் தடை செய்யப்பட்ட யூடியூப் வீடியோக்கள் இதில் கிடைக்கின்றனவாம். இந்த இரண்டு இணையதளங்களுமே ஒரே நாளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



World News



Tags : Be Tamil - World Online Tamil News Video Classifieds Cook Book Tamil Blogs Tamil Portal BeTamil Dina Seidhi Daily Science Samayal