Members
 Login
 Password

Register

Forget Password
Be Tamil | Indians average income has been increased to 40141 இந்தியாவில் சராச



ExitJunction.com  - Make Money From Your Exit Traffic!



இந்தியாவில் சராசரி தனிநபர் வருமானம் 40141 ஆக உயர்வு

31.01.2010

சராசரி இந்தியரின் ஆண்டு வருமானம் 2008-09ல் ரூ.35430 லிருந்து ரூ.40141 ஆக ரூ.4711 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு சதவீத அடிப்படையில் கணக்கிடும் பொழுது 13.3 சதவீதம் ஆகும். 2004-05ம் ஆண்டு நிலவிய விலைவாசி அடிப்படையில் கணக்கிட்டால் 2007-08ம் ஆண்டுக்கான வருமான உயர்வு 9.2 சதவீதமாகவும் 2008-09ம் ஆண்டுக்கான வருமான உயர்வு 6.7 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய புள்ளிவிவர நிறுவனம் இந்த தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளது. தற்போதைய விலைவாசியின் அடிப்படையில் கணக்கிட்டால் 2008-09ம் ஆண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு ரூ. 5228650 கோடி ஆகவும் 2007-08ம் ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு ரூ. 4540987 கோடி ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போதைய விலைவாசியின் அடிப்படையில் கணக்கிட்டால் 2008-09ம் ஆண்டுக்கான மொத்த தேசிய வருமானம் ரூ. 52,07,534 கோடி ஆகும். 2007-08ம் ஆண்டுக்கான மொத்த தேசிய வருமானம் ரூ. 4521099 கோடி. உயர்வு 15.2 சதவீதம். 2008-09ம் ஆண்டு பொருளாதார தேக்க நிலையின் பொழுது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதம் உயரந்ததற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. கட்டுமானத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி 5.9 சதவீதமாகவும், வர்த்தகம், ஹோட்டல்கள், ரெஸ்ட்ராண்டுகள் ஆகியவற்றின் வளர்ச்சி 5.3 சதவீதமாகவும் இருந்தது.



World News



Tags : Be Tamil - Indians average income has been increased to 40141