Members
 Login
 Password

Register

Forget Password
Be Tamil | 50 டாப் தலைவர்கள் 9 இந்தியர்களுக்கு இட



ExitJunction.com  - Make Money From Your Exit Traffic!



50 டாப் தலைவர்கள் 9 இந்தியர்களுக்கு இடம்

28.01.2010

உலகின் முன்னணி 50 வர்த்தக தலைவர்கள் பட்டியலில் இந்தியர்கள் 9 பேர் இடம்பிடித்துள்ளனர்.இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார பத்திரிகை பைனான்சியல் டைம்ஸ். உலகின் டாப் 50 தொழிலதிபர்கள் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.அதில் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ், அவரது தம்பி அனில் அம்பானி உட்பட 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களில் ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சரும் உண்டு.மகிந்திரா குழுமத்தின் கேசவ் மகிந்திரா, பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத், ஹீரோ குழுமத்தின் பிரிஞ்மோகன் முஞ்சால், ப்யூச்சர் குழும தலைவர் கிஷோர் பியானி ஆகியோர் மற்றவர்கள்.

50 பேர் பட்டியலில் சந்தா கோச்சர் உட்பட 3 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.சீனாவின் சோகோ குழுமத்தின் ஜாங் சின், நைன் டிராகன் தலைவர் ஜாங் யின் ஆகியோர் மற்ற 2 பேர். பட்டியலில் ஆசியா தவிர மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்தியா உட்பட பிரிக் நாடுகள் 2039ல் உலகின் முன்னணி 9 வளர்ந்த நாடுகளை முந்தும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.



World News



Tags : Be Tamil - World Online Tamil News Video Classifieds Cook Book Tamil Blogs Tamil Portal BeTamil Dina Seidhi Daily Science Samayal