FIREFOX 3.6 வெளியானது
09.02.2010
உலகின் மிகச் சிறந்த பிரவுசர் என்ற உரையுடன் மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. இந்த பிரவுசரின் முதல் சோதனைத் தொகுப்பு வெளியான ஐந்தாவது மாதத்தில் இது வெளியாகியுள்ளது.
எப்படியும் ஒரு நல்ல பிரவுசரைத் தந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் மொஸில்லா உழைத்தது, இந்த பிரவுசரின் இயக்கத்தில் தெரிகிறது.
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்கங்களுக்கான பிரவுசர்கள் மொஸில்லாவின் தளத்தில் கிடைக்கின்றன. பன்னாட்டளவில் 65 மொழிகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன என்பது மொஸில்லாவின் உலகளாவிய பார்வையினைக் காட்டுகிறது. இந்த புதிய தொகுப்பினை என்ற முகவரியில் உள்ள மொஸில்லா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே 3.5 பதிப்பு இயக்குபவர்கள், பைல் மெனு சென்று Check for Updates என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயங்குவது துரிதப்படுத்தப்பட்டு, இணையதளங்கள் மிக வேகமாக இறங்குகின்றன. முந்தைய பதிப்பினைக் (3.5) காட்டிலும் 12 சதவீதம் வேகம் இருப்பதாக இதனைச் சோதனை செய்தவர்கள் கூறுகின்றனர். சோதித்துப் பார்த்ததில் 15 சதவீதம் கூடுதல் வேகம் தெரியவந்தது.
ஆப்பரா பிரவுசரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் 3.6 மூன்று மடங்கு அதிக வேகத்தில் இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிக வேகம் எனலாம். குரோம் பிரவுசரைக் காட்டிலும் 40 சதவீதம் பின் தங்கியே உள்ளது. ஆனால் மெமரியைப் பயன்படுத்துவதில் குரோம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு பின் தங்கியே உள்ளது. பயர்பாக்ஸ் 100.3 எம்பி இடம் எடுக்கும் தளத்திற்கு குரோம் 194.6 எம்பி எடுத்துக் கொள்கிறது.
இந்த பிரவுசரின் அடுத்த முக்கிய அம்சமாக பிளக் இன் சோதனையைக் கூறலாம். பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்களை பாதுகாப்பு அடிப்படையில் முற்றிலுமாகச் சோதனை செய்த பின்னரே இந்த பிரவுசர் ஏற்றுக்கொள்கிறது. இதனால் தேர்ட் பார்ட்டி புரோகிராம்களால், பிரவுசரில் கிராஷ் ஏற்படாது. மேலும் ஏற்கனவே ஏதேனும் ப்ளக் இன் புரோகிராம் அமைக்கப்பட்டிருந்தால் (பிளாஷ், குயிக்டைம் போன்ற) அதற்கான புதிய பதிப்பு ஏதேனும், அதன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதா என்று பயர்பாக்ஸ் சோதனை செய்து அறிவித்து, புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறது.
ஏனென்றால் ஹேக்கர்கள் பழைய பதிப்புகள் மூலமே தங்கள் நாசவேலையை மேற்கொள்கின்றனர். புதிய பிரவுசர் வீடியோவினை முழுத் திரையில் காட்டுகிறது. இதனைச் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றால் என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த பார்மட்டில் அமைந்துள்ள வீடியோ வினை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்க்கவும். இயங்கும் போது அதன் மீது ரைட் கிளிக் செய்து, முழுத்திரைக்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த பிரவுசரில் இணைய தளங்கள் வேகமாக இயங்குகின்றன. இந்த வேகம் நன்றாகவே தெரிகிறது. அடுத்ததாக புதிய ஸ்கின்களை (பெர்சனாஸ்) இந்த பிரவுசர் ஏற்றுக் கொண்டு அவற்றைச் சிறப்பாக வடிவமைக்கிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கு ஏறத்தாழ 35,000 டிசைன்களில் பெர்சனாஸ் கிடைக்கிறது. இவற்றை என்ற முகவரியில் காணலாம். இந்த பிரவுசரில் இவற்றை நிறுவுவதும் எளிது. பெர்சனாஸ் இணைப்பது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது.
பெர்சனாஸ் காலரி சென்று, அதில் ஒரு பெர்சனாவின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அதற்கான ஸ்கின் அடிப்படையில், பயர்பாக்ஸ் தன் தோற்றத்தைத் தற்காலிகமாக மாற்றும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே கிளிக் செய்திடலாம். அல்லது மற்றவற்றைச் சோதனை செய்து பார்க்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட பெர்சனாஸ் பதியப்பட்டால், அவை மெனுவாகக் கிடைக்கின்றன. தேவைப் பட்டதனைத் தேர்ந்தெடுத்தால் அது உடனே அமைக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் முதலில் அறிமுகமானபோது யு–ட்யூப் வீடியோ தளம் இல்லை. குயிக் டைம், விண்டோஸ் மீடியா அல்லது ரியல் பிளேயரின் துணையை நாட வேண்டியதிருந்தது.
யு–ட்யூப் வீடியோ தளம் வந்த பின்னர் அதனை ஒருங்கிணைக்கும் வகையில் பிரவுசர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் இதன் மூலம் இன்டர்நெட் பார்க்கும் ரசிகர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப தளங்களை எளிதாக அமைக்கவும் மாற்றவும் முடிகிறது. பயர்பாக்ஸ் 3.6 பிரவுசரில் வீடியோ தளங்களை நேர்த்தியாகக் கையாள முடிகிறது.
பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதன் ஆட் ஆன் புரோகிராம்கள் பிரசித்தி பெற்றவை. இதன் கட்டமைப்பு ஓப்பன் சோர்ஸ் என அனைவரும் அறியும் வகையில் அமைந்திருப்பதால், திறமை கொண்ட பல புரோகிராமர்கள் இதற்கான ஆட் ஆன் தொகுப்புகளை இலவசமாகத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றனர். பயர்பாக்ஸ் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இன்டர்நெட் பிரவுசர்களின் கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இருப்பதனை உணரலாம். பயர்பாக்ஸ், சபாரி, குரோம், ஆப்பரா மற்றும் முதல் இடத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்துமே, எதிர்காலத்தில் வெப் அப்ளிகேஷன்கள் எப்படி முன்னேற்றமடையும் என்பதைக் கவனத்தில் கொண்டே, தங்களின் பிரவுசரை வடிவமைத்துள்ளன.
இணைய தளங்களை வடிவமைப் பவர்களுக்கு இந்த புதிய வகை பிரவுசர்கள் அதிகம் துணை புரிகின்றன. சூப்பர் வேகத்தில் ஜாவா ஸ்கிரிப்டை இயக்குவது,புதிய சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பம், டவுண்லோட் செய்யக் கூடிய எழுத்து வகைக்கு சப்போர்ட், ஆப் லைன் அப்ளிகேஷன் சப்போர்ட் நேடிவ் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரத் தொடங்கியுள்ளன.

World News
- இந்தியாவின் அழுக்கான நகரங்கள் - சர்வே முடிவுகள்
- ஜப்பானில் புதிய குழந்தை ரோபோ
- உலகின் அதிவேக விரைவுக் கணினி Road Runner
- பழம் மற்றும் காய்கறிகளால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- முட்டை மற்றும் குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி
- புதிய ஆஸ்திரேலிய வைரஸ் காய்ச்சல்
- கற்பனை செய்தால் போதும் கம்ப்யூட்டர் புரிந்துக்கொள்ளும் - இன்டெல் சாதனை
- செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
- சைபீரியாவில் 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல்
- தொட்டு உணரக்கூடிய 3D தொழில் நுட்பம்
- தமிழக விஞ்ஞானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை - ஆய்வறிக்கை
- சிறுமிக்கு அழும்போது கண்ணில் இருந்து இரத்தம்
- 5 முதல் 7 கோல்களுடன் மிகப்பெரிய புதிய சூரிய குடும்பம்
- முதலாளிகளின் ஆயுட் காலம் அதிகம் - ஆய்வறிக்கை
- ஆக்ஸிஜன் இன்றி 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்
- லேப்டாப்பை விட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிறந்தது - ஆய்வறிக்கை
- புதிய கூகுள் தொலை பேசி
- சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள்
- தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க பயிற்சி
- என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் சாத்தியக்கூறுகள்
- பெட்ரோலுக்கு பதில் விஸ்கியை எரிபொருளாக பயன்படுத்தலாம்
- பூண்டு அதிகம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம்
- ஜலதோஷத்தை தடுக்க விட்டமின்-D உணவுகள் போதும் - ஆய்வறிக்கை
- அதிக கனவுக் கண்டால் நினைவாற்றல் வளரும் - ஆய்வறிக்கை
- பாரசிட்டமால் மருந்துகளால் பக்கவிளைவு ஆஸ்துமா - ஆய்வறிக்கை
- மனித நுரையீரலில் பட்டாணி செடி
- மூளையை இயக்கும் மைக்ரோ சிப்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- சொந்தங்களிடமிருந்து பிரிந்தால் இதய நோய் வரலாம் - ஆய்வறிக்கை
- இதய நோயைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
- விண்ணில் செவ்வாய் வெள்ளி சனி கிரகங்கள் காட்சி
- விஞ்ஞானிகள் தேடும் பிரபஞ்சம் உருவான ரகசியம்
- சாப்பிட்டவுடன் சுகமாய் தூக்கம் ஒருவித மயக்கம்
- பால் பாயிண்ட் பேனாவை பற்றிய தகவல்
- கருங்கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஆறு கண்டுபிடிப்பு
- சர்க்கரை நோய்க்கு அதிக புரோட்டீன் உணவுகளும் காரணம்
- வெங்காயத்தில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்
- இழந்த மார்கெட்டைப் பிடிக்கும் INTERNET EXPLORER
- இதய நோய்களை தவிர்க்க ஏழு மணி நேரம் உறக்கம் தேவை - ஆய்வறிக்கை