Members
 Login
 Password

Register

Forget Password
Be Tamil | தானியங்கி அயர்ன் பாக்ஸ்



ExitJunction.com  - Make Money From Your Exit Traffic!



தானியங்கி அயர்ன் பாக்ஸ்

13.02.2010

ஆடையை அழகாக தேய்த்து மடிப்பது ஒரு கலை என்று சொல்லலாம். தேய்ப்பு பெட்டியில் ஆடையை தேய்க்கும்போது துணி கருகிய அனுபவம் பலருக்கு இருக்கலாம். அவசர கதியில் உபயோகிப்பது, அணைக்காமல் மறந்துவிடுவது, கவனமின்றி பயன்படுத்துவது போன்ற காரணங்களால் அயர்ன் பாக்ஸ் வெப்பம் துணியை கருக்கிவிடும். இந்த தானியங்கி தேய்ப்புப் பெட்டியில் அப்படி எதுவும் நடந்துவிடாது. தேய்ப்புப் பெட்டி சூடாக இருக்கும்போது வைப்பதற்கு தனி இடம் தேட வேண்டாம்.

பெட்டியைவிட்டு நாம் கையை விலக்கினால்போதும், சென்சார் செயல்பட்டு தானாக ஒரு குமிழ் கீழ்நோக்கி வந்து தேய்ப்புப் பெட்டியை தளத்திலிருந்து சற்று உயர்த்தி நிறுத்திவிடும். இதனால் துணிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். அதேபோல 8 நிமிட நேரம் தொடர்ந்து தேய்ப்புப்பெட்டியை பயன்படுத்தாவிட்டால் தானாகவே சுவிட்ச் ஆப் ஆகி குளிரத் தொடங்கிவிடும். இனிமேல் கவலையின்றி அனைவரும் அழகாக ஆடை தேய்க்கலாம்.



World News



Tags : Be Tamil - World Online Tamil News Video Classifieds Cook Book Tamil Blogs Tamil Portal BeTamil Dina Seidhi Daily Science Samayal