Members
 Login
 Password

Register

Forget Password
Be Tamil | Human affected by 6,284 diseases மனிதன் தன் வாழ்நாளில் 6,284



ExitJunction.com  - Make Money From Your Exit Traffic!



மனிதன் தன் வாழ்நாளில் 6,284 விதமான நோய்களால் பாதிப்பு

21.02.2010

சராசரி மனிதனுக்கு அவன் வாழ்நாளில் எத்தனை விதமான நோய்கள் ஏற்படும் என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அவனுக்கு சளி, தலைவலி, முதுகுவலி, சுளுக்கு என்று 6,284 விதமான நோய்கள் ஏற்படுகின்றன என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆக்டிவ்கோட் இணையதளம் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த இணையதளம் இங்கிலாந்து நாட்டு மக்கள் 3 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தியது.

இதில் சராசரியாக ஒரு பிரிட்டிஷ்காரர் ஆண்டுக்கு 80 விதமான சிறு சிறு நோய்களால் பாதிக்கப்படுகிறார். ஆண்டுக்கு 21 நாட்கள் வலி நிவாரண மருந்து எடுத்துக்கொள்கிறார். அல்லது தன் வாழ்நாளில் 1,649 நாட்கள் எடுத்துக்கொள்கிறார். சுளுக்கு தான் அதிகமாக பாதிக்கிறது. இது ஆண்டுக்கு 19 முறை மனிதனை தாக்குகிறது. தலைவலி ஆண்டுக்கு 16 முறை தாக்குகிறது. 3-வது அதிகமாக தாக்கும் நோய் முதுகுவலி. இது ஆண்டுக்கு 14 முறை தாக்குகிறது.



World News



Tags : Be Tamil - Human affected by 6,284 diseases