Members
 Login
 Password

Register

Forget Password
Be Tamil | India Developing Kill Vehicle to Knock Enemy Satellites Out of the Sky KILL VEHICLE - விண்



ExitJunction.com  - Make Money From Your Exit Traffic!



KILL VEHICLE - விண்வெளியில் இந்தியாவின் நவீன ஆயுதம்

24.02.2010

வளர்ந்து வரும் இந்தியா, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இந்த வளர்ச்சி ஒருபுறம் சில நாடுகளிடையே காழ்ப்புணர்ச்சி ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளது. எல்லைப்பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதில்தான் நாட்டின் பாதுகாப்பும், வளர்ச்சியும் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிடம் சிறப்பான படைபலமும், ஆயுதபலமும் இருக்கத்தான் செய்கிறது.

இதற்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக தற்போது நவீன போர்க்கருவி ஒன்றின் தயாரிப்பு பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது. கில் வெகிகிள் (KILL VEHICLE) எனப்படும் இந்த லேசர் கருவி எதிரிகளை எல்லைக்கு வெளியிலேயே வீழ்த்தும் நவீன வகையைச் சார்ந்தது. எனவே எதிரிகளின் ஏவுகணைகள், விமானங்களை இந்திய வான் எல்லைக்கு வெளியிலேயே இது வீழ்த்திவிடும்.

ஏற்கனவே தரைதளத்தில் இருந்து எதிரிகளின் இலக்கை அழிப்பது, ஏவுகணைகளை வழிமறித்து தாக்குவது போன்ற போர் ஏவுகணைகள் இந்தியா வசம் உள்ளது. இதுபோன்ற ஏவுகணைகள் பல்வேறு நாடுகளிடமும் இருக்கிறது.

2007ம் ஆண்டு சீனா, தரையில் இருந்து நெடுந்தூரத்திலேயே வழிமறித்து தாக்கும் ஏவுகணையை தயாரித்தது. 2008-ம் ஆண்டு அமெரிக்கா கப்பல் தளத்தில் இருந்து வழிமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது. தற்போது இந்தியா தயாரித்திருக்கும் கில் வெகிகிள் இவற்றைவிட சக்தி வாய்ந்தது. விண்ணில் இருந்து செயற்கைகோள் உதவியுடன் இதை இயக்க முடியும். இதனால் எதிரிகளின் வியூகத்தை இந்திய வான் எல்லைக்கு வெளியில் வைத்தே யூகித்து சமாதியாக்க முடியும். அதாவது போர் என்று வந்தால் ஸ்டார் வார்ஸ் திரைப்படம் பார்ப்பது போன்ற விண்வெளியில் பிரம்மையை ஏற்படுத்தும்.



World News



Tags : Be Tamil - India Developing Kill Vehicle to Knock Enemy Satellites Out of the Sky