சமையல் / இனிப்பு வகை

கேரட் கீர் (Carrot Kheer)

 (சைவம்)
தேவையான பொருட்கள்:

கேரட் - 1/2 கிலோ
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
நாட்டு சர்க்கரை அல்லது வாவனா வெல்லம் - 150 கிராம்
முந்திரி - 6

செய்முறை:

கேரட் மற்றும் தேங்காயை தனித்தனியே துருவி வைத்துக் கொள்ளவும்.

துருவிய கேரட் மற்றும் தேங்காயை தனித்தனியே (மிக்ஸியில்) அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு சாற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து அதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.

முந்திரியை மெல்லிய சீவலாக சீவி அதனுடன் கலந்து கொள்ளவும். சுவையான இயற்கை உற்சாக பானம் தயார்.

கவனிக்க வேண்டியவை:

இனிப்பு அதிகம் விரும்புவோர் தேவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். சாறு எடுத்தது போக மீதி இருக்கும் கேரட் சக்கையை கேரட் அல்வா செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி: பகீமா, கொந்தகை.


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 

Free adiyakkamangalam.com adsense Free sgclassify.com adsense Free dubaiassets.com adsense
Free abudhabiassets.com adsense Free classifiedsense.com adsense Free chennaiclassify.com adsense
Free qatarassets.com adsense Free indiaassets.com adsense Free malaysiaadz.com adsense
Free mytiruvarur.com adsense Free abudhabiadz.com adsense Free dubaiadz.com adsense