மொபைல் போனை காது பாதிக்காதவாறு பயன்படுத்தலாம்

24.01.2012

How to avoid ear affecting from mobile phone
மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் மொபைல் போன்கள் மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பாதிக்காத அளவிற்கு மொபைலில் பேசுவதற்கு என்ன செய்யலாம் என ஆய்வாளர்கள் சில கருத்து தெரிவித்துள்ளனர்.

தவிர்க்க முடியாத நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் மொபைல் போனில் பேசுங்கள். தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் கைபேசிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட மொபைல் போன்களை மட்டும் உபயோகியுங்கள். நேரடியாக மொபைல் போனில் பேசும் பழக்கத்தை தவிர்த்து ஸ்பீக்கர் மோட், ஹியரிங் போன் மற்றும் ஹெட்போன் உபயோகித்து உரையாடுவது நல்லது.

குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. பழுதடைந்த, சரிவர இயங்காத மொபைல் போன்களை உபயோகிக்கக் கூடாது. செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகிக்கலாம் மற்றும் மின்னஞ்சல் (EMail) தொடர்பும் சிறந்தது. மொபைல் போன் மிகக்குறைந்த பேட்டரியில் வலுவிழந்து நிற்கும் போது பேச வேண்டாம், முழுமையாக சார்ஜ் செய்து விட்டு பேசுங்கள்.



Free indiaassets.com adsense Free malaysiaadz.com adsense Free abudhabiadz.com adsense
Free classifiedsense.com adsense Free dubaiadz.com adsense Free adiyakkamangalam.com adsense
Free chennaiclassify.com adsense Free sgclassify.com adsense Free qatarassets.com adsense
Free mytiruvarur.com adsense Free dubaiassets.com adsense Free abudhabiassets.com adsense