பால் மற்றும் சூரிய ஒளி பார்வை குறைப்பாட்டை தடுக்கும்

10.01.2012

நியூயார்க் பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது.

ஐரோப்பாவில் ஆண்டிற்க்கு ஏறத்தாழ 2 லட்சம் பேர் இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 1,313 பெண்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் வைட்டமின் D அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வோர் மற்றும் உடலில் வைட்டமின் D அளவு அதிகமாக உள்ளோர் ஆகியோரிடம் இக்குறைபாடு அதிகமாக காணப்படவில்லை என்பது தெரியவந்தது.

பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் தானியம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதும் சிறந்தது. ஏனெனில் வைட்டமின் D உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது. எனவே பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை பயன்படுத்துவது இக்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.



Free malaysiaadz.com adsense Free dubaiadz.com adsense Free mytiruvarur.com adsense
Free chennaiclassify.com adsense Free qatarassets.com adsense Free dubaiassets.com adsense
Free sgclassify.com adsense Free abudhabiadz.com adsense Free adiyakkamangalam.com adsense
Free abudhabiassets.com adsense Free classifiedsense.com adsense Free indiaassets.com adsense