அழிந்துக்கொண்டிருக்கும் உராங்குட்டான் குரங்குகள் இனம்

19.01.2012

Endangered  orangutan monkeys
காடுகள் அழிக்கப்படுவதால் அரிய விலங்கான உராங்குட்டான் குரங்குகள் அழிந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள போர்னியா தீவில் மனித நடமாட்டமில்லாத அடர்ந்த காடுகள் நிறைந்துள்ளது. இந்த தீவில் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பனை மரங்கள். அதனால் பனம்பழத்தை விரும்பி திண்ணும் உராங்குட்டான் குரங்குகள் எண்ணிக்கையும் இங்கு அதிகம்.

உலகளவில் சமையல் எண்ணெய் தேவை அதிகரித்து வருவதால், போர்னியா தீவில் உள்ள பனை மரங்களை குறி வைத்துவிட்டனர். பாமாயில் உற்பத்திக்காக தீவில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி எடுத்து செல்கின்றனர். இந்த தீவில் வசிப்பவர்களே விபரீதம் தெரியாமல் பனைமரங்களை வெட்டி வருகின்றனர். அத்துடன் இந்த குரங்குகளையும் அதிகளவில் வேட்டையாடப்படுவதால் அரிய இனமான உராங் குட்டான் குரங்குகள் அழிந்து வருவதாக வன ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

உலகளவில் சுமார் 20 சதவீத உராங்குட்டான் குரங்குகள் போர்னியா தீவில் தான் இருந்தன. இப்போது அந்த நிலை இல்லை. கணிசமாக குறைந்துவிட்டன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை நீடித்தால் 20 ஆண்டுகளில் இந்த தீவில் உராங்குட்டான்கன் முற்றிலும் அழிந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.



Free sgclassify.com adsense Free abudhabiadz.com adsense Free chennaiclassify.com adsense
Free dubaiadz.com adsense Free abudhabiassets.com adsense Free dubaiassets.com adsense
Free qatarassets.com adsense Free indiaassets.com adsense Free mytiruvarur.com adsense
Free adiyakkamangalam.com adsense Free malaysiaadz.com adsense Free classifiedsense.com adsense