மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியைப் பற்றிய தகவல்

11.02.2012

Migraine headache symptoms
மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது. இது மன உலைச்சலால் ஏற்படுகிறது. இந்த தலைவலி ஏற்பட்டால் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாது. இதனால் வாந்தி ஏற்படும். சத்தமும், வெளிச்சமும் வலியை இன்னும் அதிகப்படுத்தும். வாசனையான பொருட்கள் தலைவலியை உண்டாக்குகிறது. தலையின் இரண்டு பக்கங்கள் அல்லது தலை முழுவதும் வலி ஏற்படும். வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் வலி இருக்கும்.

சாதாரண தலைவலி என்றால் நல்ல தூக்கம், பாராசிடமால் மத்திரைகள், நிம்மதியான சூழல் என சின்னச் சின்ன விஷயங்களே குணம் தரும். ஆனால் வாரத்தில் 2 முறைக்கு மேல் வலி இருந்தாலோ, திடீரென்று தலைவலி அதிகமானாலோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். திடீரென்று தலைவலி அதிகமானால், காய்ச்சல், வலிப்பு, பார்வைக்கோளாறு, பேச்சுக் கோளாறு, கழுத்து விரைப்புத் தன்மை ஏற்படும். இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.



Free dubaiadz.com adsense Free sgclassify.com adsense Free chennaiclassify.com adsense
Free malaysiaadz.com adsense Free mytiruvarur.com adsense Free abudhabiadz.com adsense
Free classifiedsense.com adsense Free abudhabiassets.com adsense Free adiyakkamangalam.com adsense
Free indiaassets.com adsense Free dubaiassets.com adsense Free qatarassets.com adsense