2200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் - ஆய்வறிக்கை

23.02.2012

2200 years before the cancer
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழக பேராசிரியர் சலிமா இக்ரம். இவரது தலைமையில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் மம்மிகள் குறித்த ஆய்வு கடந்த 2 ஆண்டுகளாக நடந்தது. 40 வயதில் இறந்தவரது மம்மியை வைத்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கிடைத்த தகவல்களின் படி 2200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் தோன்றியிருப்பது தெரியவந்துள்ளது.

சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான ஆண் மம்மியை வைத்து ஆய்வு செய்தனர். அந்த மம்மி 40 வயதில் சிறுநீர் குழாயில் ஏற்பட்ட புற்றுநோயால் இறந்திருக்கிறார். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட ஒருவரது உணவு முறை, பழக்க வழக்கங்கள், பரம்பரை பாதிப்புகள் என பல காரணங்கள் உள்ளன. அந்த காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் இருந்திருக்கவில்லை. இயற்கை உணவுகளையே மக்கள் பெரும்பாலும் சாப்பிட்டனர். மக்கள்தொகை குறைவு என்பதால் சூற்றுச்சூழலும் நன்றாகவே இருந்திருக்கும். இவற்றைக் கொண்டு பார்க்கும் போது முழுக்க முழுக்க பரம்பரை காரணத்தாலேயே அந்த மம்மிக்கு புற்றுநோய் உருவாகியிருப்பது தெளிவாகிறது என்றார்.



Free abudhabiadz.com adsense Free abudhabiassets.com adsense Free qatarassets.com adsense
Free dubaiadz.com adsense Free classifiedsense.com adsense Free dubaiassets.com adsense
Free chennaiclassify.com adsense Free adiyakkamangalam.com adsense Free malaysiaadz.com adsense
Free indiaassets.com adsense Free mytiruvarur.com adsense Free sgclassify.com adsense