சந்திரனில் அதிகளவில் டைட்டேனியம் தாதுக்கள் உள்ளது - விஞ்ஞானிகள்

11.10.2011

Moon contains treasure trove of titanium ores
நாசாவின் சக்திவாய்ந்த கேமராக்களைக் கொண்ட விண்கலம் அனுப்பிய ஏழு விதமான புகைப்படங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ஏற்கனவே கடந்த 1972ம் ஆண்டு அப்பல்லோ-17 விண்கலம் மூலம் சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்கள் அங்கு வெட்டி எடுத்து வந்த பாறைகளில் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் டைட்டேனியம் டி என்ற உலோக தாதுக்கள் இருப்பது தெரியவந்தது. டைட்டேனியம் என்பது உருக்கு உலோகத்தை விட மிகவும் உறுதியானது.

இந்த உலோகம் பூமியில் ஒரு சதவீதம் தான். அதாவது மிக குறைவாக உள்ளது. ஆனால் சந்திரனில் அவை கொட்டிக் கிடக்கின்றன. அதாவது 10 மடங்கு அதிகம் இருக்கிறது. இவை பாறைகளில் மறைந்து கிடக்கின்றன. டைட்டேனியம் தவிர இரும்பு தாதுக்களும் மறைந்துள்ளன. இந்த தகவலை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் தெரிவித்தார். பிரான்சில் உள்ள நான்டெஸ் என்ற நகரில் நடந்த மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்து இந்த தகவலை வெளியிட்டார்.



Free adiyakkamangalam.com adsense Free dubaiassets.com adsense Free sgclassify.com adsense
Free chennaiclassify.com adsense Free abudhabiadz.com adsense Free mytiruvarur.com adsense
Free dubaiadz.com adsense Free classifiedsense.com adsense Free malaysiaadz.com adsense
Free abudhabiassets.com adsense Free indiaassets.com adsense Free qatarassets.com adsense