மனித மூளையைப் போல் தானியங்கி சிப் - IBM சாதனை

22.08.2011

IBM produces cognitive computing chip behave like human brain
தானியங்கி அறிவாற்றல் மிக்க கணணி (COGNITIVE COMPUTING) தொழிநுட்ப துறையில் புதிய வளர்ச்சியாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி கம்ப்யூட்டர் சிப்பை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது. இது மனிதர்களின் மூளையைப் போல தானாக சிந்திக்கும் செயல் திறன் கொண்டது.

இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சூழலை உணர்தல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான வேலைகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே இதன் தயாரிப்புக்கான முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவிக்கின்றது. செயற்கை நுண்ணறிவின் (ARTIFICIAL INTELLIGENCE) அடிப்படையில் இது உருவாக்கப்ட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிப்பை உருவாக்கும் திட்டம் சுமார் நூறு ஆய்வாளர்களின் உதவியுடன் சுமார் 6 வருடங்களாக நடைபெற்றுள்ளது. இதற்காக அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நிதியுதவியளித்துள்ளது. ஐ.பி. எம் அமைப்பும் இந்த ஆய்விற்க்கு பெரும் நிதியுதவியளித்துள்ளது.



Free mytiruvarur.com adsense Free abudhabiadz.com adsense Free sgclassify.com adsense
Free abudhabiassets.com adsense Free indiaassets.com adsense Free adiyakkamangalam.com adsense
Free qatarassets.com adsense Free dubaiadz.com adsense Free dubaiassets.com adsense
Free chennaiclassify.com adsense Free classifiedsense.com adsense Free malaysiaadz.com adsense