உலகின் மிகச் சிறிய டிஜிட்டல் கேமிரா

23.09.2011

Smallest camera in the world
உலகின் முதலாவது மிகச் சிறிய விற்பனைக்கான டிஜிட்டல் கேமிராவை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. வெறும் 26 மில்லி மீட்டர் அளவான இக்கருவியின் மூலம் 2 மெகா பிக்சல் வரையான புகைப்படத்தினை எடுக்க முடியும். மேலும் இதன் மூலம் வீடியோ பதிவும் மேற்கொள்ள முடியும். இதன் நிறை 26 கிராம்களே ஆகும். இதனை அமெரிக்காவைச் சேர்ந்த ஹமாசர் ஸ்கிலிமெர் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் விலை 99.95 அமெரிக்க டாலர்களாகும்.

உருவத்தில் சிறியதானாலும் செயற்பாட்டில் இக்கருவி பெரிய கேமிராக்களுக்கு சமமானது என்றும் சந்தைக்கு வரும் போது பெரும் வரவேற்பைப் பெறும் என்றும் இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே நேரம் கடந்த மே மாதம் இஸ்ரேலைச் சேர்ந்த மெடிகஸ் நிறுவனம் 0.99 மில்லி மீட்டர் அளவிலான கேமிரா ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது



Free dubaiassets.com adsense Free indiaassets.com adsense Free classifiedsense.com adsense
Free qatarassets.com adsense Free chennaiclassify.com adsense Free abudhabiadz.com adsense
Free adiyakkamangalam.com adsense Free abudhabiassets.com adsense Free dubaiadz.com adsense
Free mytiruvarur.com adsense Free malaysiaadz.com adsense Free sgclassify.com adsense