புற்றுநோயை கண்டறியும் புதிய மொபைல் போன்கள்

25.01.2012

Cancer detection in smart phones
மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது. ஜேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில் பயனுள்ள வேதியல் (Angewandte Chemie) எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவாறு தொடுதிரை தொழில்நுட்பத்தை (Touch Screen) புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர். இதற்காக தொடுதிரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், PDA மற்றும் தொடுதிரை தொழில்நுட்பத்தைக்கொண்ட மற்ற கம்ப்யூட்டர் சாதனங்களையும் இதற்காக பயன்படுத்தமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இது உடலிலுள்ள புரதம், DNA (மரபணு மூலக்கூறு) என்பவற்றிலிருக்கும் தன்மைகளுக்கு ஏற்றவாறு தொடுதிரை சாதனங்கள் செயற்படுவதால், இதை புற்றுநோயை கண்டறிய சாதகமாக பயன்படுத்த முடியும் என்பதில் தமக்கு 100 சதவீத நம்பிக்கை இருப்பதாகவும் இதற்காக தொடர் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தொடுதிரையில் வழியாக இதய துடிப்பு மற்றும் நாடி துடிப்பையும் கணக்கிட முடியும் என தெரிவித்துள்ளனர்.



Free qatarassets.com adsense Free classifiedsense.com adsense Free mytiruvarur.com adsense
Free abudhabiassets.com adsense Free indiaassets.com adsense Free sgclassify.com adsense
Free dubaiadz.com adsense Free adiyakkamangalam.com adsense Free chennaiclassify.com adsense
Free dubaiassets.com adsense Free abudhabiadz.com adsense Free malaysiaadz.com adsense